கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக, முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொண்ட விண்ணப்பதாரிகளைத் தவிர, வேறு நபர்களுக்கு இன்று (12) சேவை வழங்கப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று நேரத்தை ஒதுக்கிக்கொண்டவர்கள், தங்களது விண்ணப்பங்களை மதியம் 12 மணிக்கு முன்னதாக, தமது திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.