follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1வாசகர்களுக்கு இனிய தமிழ் - சிங்கள புதுவருட வாழ்த்துக்கள்

வாசகர்களுக்கு இனிய தமிழ் – சிங்கள புதுவருட வாழ்த்துக்கள்

Published on

அனைத்து தமிழ் – சிங்கள வாசகர்களுக்கும் டெய்லி சிலோன் இணையத்தளம் தமிழ் – சிங்கள புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இம்முறை புத்தாண்டினை எளிமையாகவும், ஆடம்பரமின்றியும் உங்களது குடும்ப அங்கத்தவர்களுடன் கொண்டாடுங்கள்.

இந்த இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும் நீங்களும் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துகின்றோம்.

இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டுவர டெய்லி சிலோன் இணையத்தளம் சார்பாக வாழ்த்துகிறோம்.

  • திருக்கணித பஞ்சாங்கம்

புதுவருடப் பிறப்பு

14.04.2023 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2. 59 மணிக்கு சோபகிருது வருடம் பிறக்கிறது.

விஷு புண்ணிய காலம் மருத்து நீர் வைக்கும் நேரம்

14.04.2023 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.59 மணி முதல் மாலை 6.59 மணி வரை (தலை – கொன்றை இலை, கால் – புங்கை இலை, திசை – கிழக்கு அல்லது வடக்கு)

ஆபரணங்கள்

முத்து, வைரம் பதித்தவை

ஆடைகள்

வெள்ளை பட்டாடை, மஞ்சள் கரை வைத்த வெள்ளை ஆடை

கைவிசேட நேரம்

15ஆம் திகதி சனிக்கிழமை காலை 6.45 – 7.30 மற்றும் காலை 8.00 – 8.55

16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 – 9.30 மற்றும் நண்பகல் 12.10 – பிற்பகல் 1.15

தோஷ நட்சத்திரங்கள்

ரோகிணி, மிருகசீரிடம் (3,4 பாதங்கள்), திருவாதிரை, புனர்பூசம் (1,2,3 பாதங்கள்), அஸ்தம், உத்தராடம் (2,3,4 பாதங்கள்), திருவோணம், அவிட்டம் (1,2 பாதங்கள்)

வியாபாரம், புதுக்கணக்கு ஆரம்பித்தல்

26.4.2023 புதன்கிழமை காலை 7.32 மணி முதல் 9.05 மணி வரை

03.05.2023 புதன்கிழமை காலை 7.30 மணி முதல் 8.40 மணி வரை

05.05.2023 வெள்ளிக்கிழமை காலை 7.15 மணி முதல் காலை 8.28 மணி வரை

  • வாக்கிய பஞ்சாங்கம்

புது வருடப் பிறப்பு

14.04.2023 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.03 மணிக்கு சோபகிருது வருடம் பிறக்கிறது.

விஷு புண்ணிய காலம் மருத்து நீர் வைக்கும் நேரம்

14.04.2023 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.03 மணி முதல் மாலை 6.03 மணி வரை (தலை – கொன்றை இலை, கால் – புங்கை இலை, திசை – கிழக்கு அல்லது வடக்கு)

ஆடைகள்

வெள்ளை பட்டாடை, வெள்ளை கரை வைத்த புதிய பட்டாடை

ஆபரணங்கள்

முத்து, வைரம் பதித்தவை

கைவிசேட நேரம்

15ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.52 – 9.00

16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.49 – 9.48

வியாபாரம், புதுக்கணக்கு ஆரம்பித்தல்

11.05.2023 வியாழக்கிழமை முற்பகல் 10.24 மணி முதல் நண்பகல் 12.27 மணி வரை

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...