follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்பிரான்சில் அரச ஊழியர்களின் ஓய்வு வயது 64-ஆக உயர்வு சட்டம் அமுலுக்கு

பிரான்சில் அரச ஊழியர்களின் ஓய்வு வயது 64-ஆக உயர்வு சட்டம் அமுலுக்கு

Published on

பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64-ஆக உயர்த்த ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் தீர்மானித்துள்ளார்.

இதற்காக ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு மக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஓய்வு வயது அதிகரிப்பை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமல் சட்டமாக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மெக்ரான் மேற்கொண்டார்.

இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது. தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தினர். இதில் வன்முறை சம்பவங்களும் நடந்தது.

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் தொடர்பாக பிரான்ஸ் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இத்திட்டத்துக்கு கோர்ட்டு ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து அரசு ஊழியர் ஓய்வு வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்தும் சட்டத்தை ஜனாதிபதி மெக்ரான் அமலுக்கு கொண்டு வந்தார். இச்சட்டத்தை அரசிதழில் பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் மக்களின் போராட்டங்களை மீறி சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஓய்வு வயது மசோதாவை திரும்ப பெற கோரி போராட்டங்கள் கடுமையாக நடந்து வரும் நிலையில் தற்போது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது போராட்டக்காரர்களை ஆத்திரமடைய செய்துள்ளது. இதனால் பிரான்சில் போராட்டங்கள் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...