அதிக வெப்பம் காரணமாக மனநோய் ஏற்படும் அபாயம்

1181

தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் மன உளைச்சல் உள்ளிட்ட மன நோய்கள் அதிகரிக்க கூடும் என மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவிக்கிறார்.

இதனால் மக்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடும் என சுட்டிக்காட்டியுள்ள மனநல மருத்துவர் ரூமி ரூபன், இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கின்றார்.

இதற்கிடையில், மனநோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்களுக்கு தாகம் குறைவாக இருக்கும் என்றும் அதனால் அவர்கள் நீரிழப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபன் கூறுகிறார்.

அதிக வெப்பமான காலநிலை காரணமாக குழந்தைகளின் சிந்தனைத்திறன் குறைவடையக்கூடும் எனவும் இதனால் பிள்ளைகளுக்கு கல்விச் சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலை மே இறுதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சில நாட்களாக நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையால் ஹூமாவே தீவின் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் பொலன்னறுவையில் அதிக வெப்பநிலையாக 36.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் வரை இந்த நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here