‘அஜித் ரோஹனவுக்கு அப்படி சொல்ல முடியாது’ – டிரான் அலஸ்

509

தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வழமையான நடைமுறைக்கு அமைய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

அஜித் ரோஹன உட்பட ஏழு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முழுமையான அனுமதிக்கு உட்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு அவ்வாறான இடமாற்றங்களை மேற்கொள்ள ஆணைக்குழு அதிகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு சேவைத் தேவையின் அடிப்படையில் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த வேளையில், அஜித் ரோஹன மாத்திரம் இடமாற்றத்தை மறுத்ததாகத் தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர், இது தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here