நேபாளை தாக்கிய இரட்டை நிலநடுக்கம்

312

ரிக்டர் அளவுகோலில் 4.8 மற்றும் 5.9 ஆகப் பதிவான இரண்டு நிலநடுக்கங்கள் நேபாளத்தை ஒரே இரவில் தாக்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல் நிலநடுக்கம் இரவு 11:58 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) 4.9 ரிக்டர் அளவிலும், நள்ளிரவு 1:30 மணிக்கு 5.9 ரிக்டர் அளவிலும் பதிவானதாக நேபாளத்தின் சுர்கெட் மாவட்டத்தில் உள்ள நில அதிர்வு மையத்தின் அதிகாரி ராஜேஷ் ஷர்மா செய்தி நிறுவனமான ANI இடம் தெரிவித்தார்.

இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்

மேற்கு நேபாளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது. காத்மாண்டுவில் இருந்து மேற்கே 140 கிமீ தொலைவில் உள்ள கோர்கா மாவட்டத்தின் பலுவா பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 6:50 மணியளவில் தாக்கியதாக காத்மாண்டுவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

4.1 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் அண்டை மாநிலங்களான லாம்ஜங் மற்றும் தன்ஹு மாவட்டங்களிலும் உணரப்பட்டதாக அதிகாரிகளின் கூற்றுப்படி, PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் சேதம் அல்லது உயிர்சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here