follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாவிமல் வீரவன்ச மீண்டும் சீனத் தூதுவருடன் இணைந்து விசித்திரமான ஆட்டத்தில்..

விமல் வீரவன்ச மீண்டும் சீனத் தூதுவருடன் இணைந்து விசித்திரமான ஆட்டத்தில்..

Published on

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரே காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்தை ஆர்ப்பாட்டதாரர்கள் நிராகரிக்கின்றனர்.

விமல் வீரவன்ச மீண்டும் சீனத் தூதுவருடன் இணைந்து விசித்திரமான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதாக காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணித் தலைவராக இருந்த தானிஷ் அலி குறிப்பிடுகின்றார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. விமலா என்பது எங்களுக்கு ஒரு ஜோகர்.. கோட்டா போவதற்கு முன்னர் நாம் பாய்ந்து விட வேண்டும் என்று மெல்லமாய் பாய்ந்தவர் தார் விமல். அசிங்கமான அமெரிக்கர் என்று ஒரு கதையை பசிலுக்கு பரப்பியவர் விமல் தான்.. மீண்டும் இன்னொரு சுற்றில் அமெரிக்க தூதுவர் கதையினை அளக்கிறார்.. விமல் அவரது புத்தக வெளியீட்டுக்கு சீனாவின் முன்னாள் தூதுவர் ஹு வை பக்கத்தில் அமர்த்தியுள்ளார்.. எல்லா உத்தர லங்கா சபையின் கூட்டங்களுக்கும் ஹூ கட்டாயம் வருவாரு, இனி விமலுக்கு ஹூ தான்..” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...