தேர்தல் மனு பரிசீலனைக்கு திகதி நிர்ணயம்

351

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி சமர்ப்பித்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி கூடி பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (03) புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனுவை ஜூன் 9-ம் திகதி பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மார்ச் மாதம் நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதன் மூலம் சர்வஜன வாக்குரிமை உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here