அமைச்சர் நியமித்த இடைக்காலக் குழுவை ஏற்க முடியாது – மக்ஸ்வெல் டி சில்வா

304

நிர்வாகத்திற்கு சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட றிஸ்வி இல்யாஸ் தலைமையிலான உத்தியோகபூர்வ சபையை மாத்திரமே இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு ஏற்றுக்கொள்ளும் என தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் மக்ஸ்வெல் டி சில்வா சர்வதேச ரக்பி ஒன்றியத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இலங்கை ரக்பியின், மற்றும் வேறு எந்த வகையிலும் நியமிக்கப்பட்ட குழுக்களை ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால குழுக்களை சர்வதேச ஒலிம்பிக் குழுவும், ஆசிய ஒலிம்பிக் குழுவும் ஏற்றுக்கொள்ளாது எனவும் இலங்கை ரக்பி யூனியனின் விவகாரங்கள் அதன் அரசியலமைப்புக்கேற்ப நிர்வகிக்கப்பட வேண்டும் எனவும் தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய ஒலிம்பிக் குழு மற்றும் விளையாட்டுச் சட்டத்தின் பிரகாரம் சம்பந்தப்பட்ட சங்கங்களின் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் மக்ஸ்வெல் டி சில்வா கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஆசிய ஒலிம்பிக் கமிட்டி உட்பட ஏழு தரப்பினருக்கு மக்ஸ்வெல் டி சில்வா அந்தக் கடிதத்தின் பிரதிகளை அனுப்பியுள்ளார்.

றிஸ்வி இல்யாஸ் தலைமையிலான ரக்பி நிர்வாகத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி கலைத்துவிட்டு ரக்பி நிர்வாகத்துக்கான இடைக்கால குழுவொன்றை நியமித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here