தர்ஷன ஹந்துங்கொடவுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

244

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சிரேஷ்ட ஒருவருக்கு அவதூறான காணொளிகளை யூடியூபில் பதிவேற்றுவதைத் தடுக்கும் வகையில் சமூக ஊடக செயற்பாட்டாளரான தர்ஷன ஹந்துங்கொடவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம முன்னிலையில் இந்த முறைப்பாடு இன்று (10) அழைக்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதி தர்ஷன ஹந்துங்கொட சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, இந்த அறிக்கையானது பொதுமக்களுக்கு அறிவிக்கும் நோக்கில் தமது கட்சிக்காரரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான உண்மைகளை முன்வைக்க அதற்கான திகதியை வழங்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார்.

இதன்படி, குறித்த முறைப்பாட்டை எதிர்வரும் 24ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், தற்போது வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவை அன்றைய தினம் வரை நீடிப்பதாகவும் உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் திணைக்களத்தின் சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஒருவரினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு முறைப்பாடுகளை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி திருமதி பூர்ணிமா பரணகம இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here