பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணை மேற்கொள்ள அந்நாட்டின் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
அல் காதிர் நம்பிக்கை நிதியம் தொட்ரபான வழக்கில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரிப்பதற்காகவே அவர் விளக்கமறியலில் வைக்கப்படடுள்ளார்.
நேற்று கைது செய்யப்பட்ட இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் பொலிஸ் தலைமையகத்திலுள்ள விசேட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.