follow the truth

follow the truth

May, 3, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"மக்கள் மயிலாட்டத்தினை பார்க்கவில்லை, நிர்வாணத்தினையே பார்த்தனர்"

“மக்கள் மயிலாட்டத்தினை பார்க்கவில்லை, நிர்வாணத்தினையே பார்த்தனர்”

Published on

எல்லா ஆட்சியிலும் நீதித்துறை அமைச்சராக இருக்கும் விஜயதாச ராஜபக்ஷவின் மயிலாட்டத்தினை மக்கள் பார்க்கவில்லை, அதற்கு மாறாக மயிலின் சிறகுகளுக்கு பின்னால் இருக்கும் நிர்வாணத்தினையே பார்த்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும இன்று(11) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

“இங்கிலாந்தில் வசிக்கும் சாமர குணசேகர, மேற்கிந்திய தீவுகள் பகாமஸ் இலுள்ள வங்கிக் கணக்கிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தைப் பெற்றுள்ளார் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடம் நான் தெரிவித்தேன். அதை அவர் இங்கிலாந்திலுள்ள ஒரு வங்கிக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது என தவறாக புரிந்து கொண்டுள்ளார்..

எக்ஸ்பிரஸ் பேர்ல் விவகாரம் குறித்த உண்மையை மூடி மறைக்க தான் வழங்கிய தகவலை நீதியமைச்சர் பயன்படுத்தியுள்ளார். குறித்த பிரச்சினை தொடர்பில் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக நான் அவரை நம்பி உறுதிப்படுத்தப்படாத தகவலை அவருக்கு வழங்கினேன்

அது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இருந்தால் நான் அதை இரகசியமான முறையில் அவருக்கு வழங்கியிருக்க மாட்டேன். குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரி நான் அவருக்கு தகவலை வழங்கினேன். அதை செய்யாமல் அவர் ஊடகங்களுக்கு அந்த இரகசிய தகவலை சொல்லி விட்டு மயில் போல் ஆட்டம் போட்டார். மக்கள் அந்த மயிலாட்டத்தினை பார்க்கவில்லை, அதற்கு மாறாக மயிலின் சிறகுகளுக்கு பின்னால் இருக்கும் நிர்வாணத்தினையே பார்த்தனர். இப்போது அவர் வெளியிட்ட தகவல் தவறு என தெரிந்தவுடன் என் மேல் பழி போடுகின்றார்

தான் வெளியிட்ட தகவல் சரியா தவறா என ஒரு மாதம் கழிந்த பின்னும் அவரால் அறிக்கை ஒன்றை வெளியிட முடியவில்லை. அவர் தன்னுடைய பதவியை ஒரு குழந்தையிடம் ஒப்படைக்கலாம்..” என அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...