ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி

254

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் இன்று உலகிற்கு சவாலாக உள்ள போதிலும் அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நிலையம் இல்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பல நாடுகளை பங்குபற்ற வைத்து அதற்கான பணிகளை முன்னெடுக்க இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற 10வது சுற்றுச்சூழல் விமானி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சனத்தொகை சுதந்திரம் பெற்ற போது இருந்ததை விட தற்போது மூன்று மடங்கு அதிகமாக வாழ்கின்ற போதிலும் நாட்டில் காணிகளின் அளவு அதிகரிக்கவில்லை காடுகளின் அளவு குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

2050 ஆம் ஆண்டளவில் உலக மக்கள் தொகை அதிகரிக்கும் போது காலநிலை மாற்றத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது சவாலாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பான புதிய சட்டத் தொடர்களை கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here