இராணுவம் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டதற்கான காரணம் வெளியானது

3050

அவசரநிலையில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் முப்படையினரும் முன்பயிற்சிகளை வழங்குவதற்காக கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் முப்படையினரும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி முப்படையினரும் ஒத்திகையில் மாத்திரம் ஈடுபட்டுள்ளதாகவும், அன்றி எவ்வித கடமை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இன்று நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அவசர காலங்களில் பொலிஸாருக்கு கடமையாற்றும் வகையில் இராணுவத்தினர் இவ்வாறு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கான பயிற்சிக்கான இறுதி திகதியை அறிவிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 12ஆம் திகதி முதல் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பொலிஸாரைத் தவிர முப்படையைச் சேர்ந்தவர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இணைப்புச் செய்திகள்
கொழும்பிற்கு பலத்த பாதுகாப்பு

கொழும்பின் விசேட பாதுகாப்பை கலைப்பது குறித்து இன்று இறுதி தீர்மானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here