விமல் மீதான இலஞ்ச வழக்கு விசாரணைக்கு திகதி அறிவிப்பு

254

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தொடர முடியாது என அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனை தொடர்பில் வாய்மூல விளக்கங்களை எதிர்வரும் ஜூன் மாதம் 16 ஆம் திகதி சமர்ப்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (15) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை அமைச்சராக கடமையாற்றிய போது 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் பணத்தை சம்பாதித்து இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக இலஞ்ச ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here