ராஜபக்சர்கள் மட்டுமல்ல சஜித், ஜலனி ஆகியோரும் ஜெரோம் பெர்ணான்டோவின் சீடர்கள்

1364

ராஜபக்சர்கள் மட்டுமல்ல, சஜித், ஜலனி ஆகியோரும் சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணான்டோவின் சீடர்கள் என புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

இது குறித்து தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. ஜெரோம் பெர்ணான்டோவின் மத பிரச்சாரங்கள் ஆரம்பமாவது 2020ம் ஆண்டுகளில்.. கட்டுநாயக்கவில் மிராக்கல் ட்ரோம் எனும் தேவாலயத்தினை ஆரம்பித்தனர். இதனை க்ரேஷன் குணவர்த்தன என்பவர் தனது சுமார் 10 ஏக்கர் காணியை இவ்வாறு தேவாலயத்திற்கு வழங்குகின்றார்.

இதனை அபிவிருத்தி செய்வதற்கு பில்லியன் கணக்கில் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான எந்தவொரு ஒடிட் தரவுகளும் இல்லை. இவற்றினை அரசியல் அதிகாரம் இன்றி செய்ய முடியாது, அதுவும் born again எனும் மதக் குழுவும் இதற்கு துணை.

ஜெரோம் பெர்ணான்டோவுக்கு அரசியல் பலமில்லாது இந்தளவு வளர முடியாது. அவ்வாறு பக்க பலமாக பல அரசியல்வாதிகள் உள்ளனர்.

சஜித் பிரேமதாச, அவரது மனைவர் ஜலனி பிரேமதாச, ரோஸி சேனாநாயக்க, சாலிய பீரிஸ், தப்புல, ஹர்ஷ டி சில்வா, ஆர்ப்பாட்டதாரர்களில் நிறைய பேர் மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று மகன்களும் ஜெரோமின் சீடர்கள்.

ஷிரந்தி ராஜபக்ஷ கிறிஸ்தவர் என்பதால் அவர் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை விட்டு கிறிஸ்தவ மதத்திற்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அதுதான் ஐதீகம். அவ்வாறு இருக்க தனது மூன்று மகன்களையும் ஜெரோமுடன் கோர்த்து விடுகிறார்.

அரசியலில் மிகவும் பேசப்பட்ட ஒன்று தான் ரணில் வீட்டினை எரித்தது. யார் எரித்தார்கள்? born again எனும் குழுவின் உறுப்பினர்கள் என்பது தெளிவான ஒன்று.

சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாசவின் ஆண் நண்பர் தான் லக்ஷ்மன் பொன்சேகா. அவர் born again இனது சகா தான். இவர்களது கதைகள் எனக்கு நல்லாகவே தெரியும். என்னிடம் இதற்கான ஆதாரங்கள் உண்டு.

ஜெரம் இரண்டு இலக்குகளுடன் பயணிக்கிறார். ஒன்று அமெரிக்காவுக்கு தேவையான அரசியல் ஸ்தாவரம். இது அமெரிக்காவின் ஒரு விளையாட்டு, தமிழ் பேசும் மக்கள் இருப்பதால் இந்தியாவுக்கு பலமாக இலங்கை உள்ளது. ஆனால் அமெரிக்கா தனது பலத்தினை கிறிஸ்தவ மதத்தினை வைத்து தான் உருவாக்க முயற்சிக்கிறார்கள். அது இலங்கைக்கு மட்டும் விதிவிலக்கல்ல.. ஆப்பிரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்கா ஆகியவையும் இவற்றுக்கு உள்ளடங்கியுள்ளது.

அடுத்த இலக்கு தான், ஜெரோம் இலங்கையில் தனது சகாக்கள் என பழகுவது மிகவும் பலம்பொருந்திய பிரபுக்கள் வளாகத்துடன்.. அதனால் இவரது காய் காய்நகர்த்தல்கள் ஜெரோமுக்கு சாதகமாகியது. இவற்றுக்கு காரணமும் மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் தான்.. “ எனத் தெரிவித்திருந்தார்.

மூத்த ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுடனான நேர்காணலில் அவர் இதனைக் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here