முட்டை இறக்குமதியை அதிகரிக்க கவனம்

241

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் அளவை அதிகரிப்பதில் அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

மூன்று அதிகாரிகள் ஏற்கனவே இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது முட்டைகளை இறக்குமதி செய்யும் பண்ணைகளை உரிய அதிகாரிகள் அவதானித்து நாட்டுக்கு வந்த பின்னர் அறிக்கை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் ஒரு மில்லியன் இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக அரச வர்த்தக பல்வேறு சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here