ஜனாதிபதிக்கு அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடமிருந்து மகஜர்

512

நாட்டில் இடம்பெற்று வரும் இனவாதம் மற்றும் மதவெறி சம்பவங்கள் அங்காங்கே இடம்பெற்று வர வாய்ப்புக்கள் அதிகம் எனவும், இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அஸ்கிரி பீடத்தின் வரகாகொட ஸ்ரீநாரதன நாயக்க தேரரினால் ஜனாதிபதியிடம் விசேட மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (20) கண்டி மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க ஹிமிகளை தரிசிக்க வந்த போதே அஸ்கிரி மகாநாயக்க தேரர் இந்த விசேட செய்தியை கையளித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள விகாரைகள் மற்றும் நாடெங்கிலும் உள்ள தனித்துவமான வரலாற்று சிறப்புமிக்க பௌத்த விகாரைகளை புனரமைப்பதில் உள்ள தடைகள் நீக்கப்பட்டு அந்த பணிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் மூன்று விடயங்கள் அடங்கிய குறிப்பாணையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தொல்பொருள் இடங்கள் தொடர்பான திட்டங்கள் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுவதுடன், வெளி தரப்பினர் வழங்கும் உதவிகளை அதற்காகப் பயன்படுத்த வேண்டும்.

மேற்படி விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here