மே 9 குறித்து விசாரணை கோரிய மனு மீளப்பெற்றது

413

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் எரித்து நாசப்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி அமைச்சர் பந்துல குணவர்தன உள்ளிட்ட குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீளப் பெறப்பட்டது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக தனது கட்சிக்காரர் தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சரின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, அதில் திருப்தியடைவதாகவும், அதனடிப்படையில் குறித்த மனுவை மீளப்பெறுவதற்கு அனுமதி கோரினார்.

இந்தக் கோரிக்கை தொடர்பான மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா இதனை எதிர்த்தார்.

எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் தலைமையிலான மேல்முறையீட்டு குழாம் மனுவை மீளப்பெற அனுமதி அளித்தது.

மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட முப்பத்தொன்பது அரசியல்வாதிகள் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here