ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் வைரஸ் காய்ச்சல் பரவுவது குறித்து பரிசோதனை

226

பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் சுமார் 92 மாணவர்கள் திடீர் சுகவீனத்துக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

அத்துடன் பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் ஏதேனும் வைரஸ் நோய் பரவுகின்றதா என்பது தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பரிசோதகர்களுக்கு வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து இன்று வைத்தியசாலைக்கு சென்ற சுகாதார அதிகாரிகள் அங்கு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களின் இரத்த மாதிரிகளும் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here