‘கொம்பனித்தெரு’ பெயரில் மீண்டும் மாற்றம்

1102

கொழும்பு பிரதேச செயலகத்தில் உள்ள ‘Slave Island’ (ஸ்லேவ் ஐலண்ட்) என அழைக்கப்படும் கொம்பனித்தெரு (கொழும்பு 02) பிரதேசத்தை அவ்வாறே திருத்தங்கள் இன்றி பயன்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கிராம அலுவலர் வசமிருந்து “கம்பெனி தெரு” என்று அழைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 01.12.1992 திகதியிடப்பட்ட 743/5 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலைத் திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் திரு.தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here