follow the truth

follow the truth

May, 17, 2024
HomeTOP1புதிய மின்கட்டண திருத்தம் முன்மொழிவு

புதிய மின்கட்டண திருத்தம் முன்மொழிவு

Published on

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டண திருத்தத்தின் விலையை அமைச்சர் இன்று (24) பாராளுமன்றத்தில் சமர்பித்தார்.

இதன்படி, தற்போதுள்ள அலகு 0-30 இற்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதிய அலகின் விலை ரூ.25 ஆக திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது.

இதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை 400 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, மின்சாரக் கட்டணத்தில் முதலாம் பிரிவினருக்கு குறைந்த பட்சம் 23% சலுகை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்கள் 1,744,000 எனத் தெரிவித்தார்.

மேலும், 31-60 அலகுகளுக்கு 9% மற்றும் 0-60 அலகுகளுக்கு 7% மின் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

0-30 அலகுகள் பயன்படுத்தும் 15,646 மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணம் ஜூலை மாதத்தில் 23% குறைக்கப்படும் என்றும், 31-60 அலகுகளைப் பயன்படுத்தும் 10,692 மத வழிபாட்டுத் தலங்களுக்கு 7% மின் கட்டணத்தைக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஹோட்டல் பிரிவினருக்கு குறைந்தபட்சம் 9% மின்சார கட்டணம் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு வரி விதிக்க கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி விதிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் விவசாய அமைச்சர்...

“அரசாங்கத்தின் பயணம் சரியில்லை. தீர்மானமொன்று எடுக்க வேண்டும்”

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும்...

டயானாவிடம் சிஐடி 5 மணி நேரம் விசாரணை

முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் டயானாவிடம் குற்றப் புலனாய்வுத் துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. அவர் பயன்படுத்திய...