அலி சப்ரிக்கு பாராளுமன்றினை தடை விதிக்க கோரி பிரேரணை

993

சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு தடை விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணை தொடர்பில் கட்சித் தலைவர் கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் விசாரணைகள் முடியும் வரை பாராளுமன்றத்திற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இம்முறையும் அவ்வாறே செயற்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும் வரை நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு நாடாளுமன்றத்தை தடை செய்யுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பிரேரணைக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், 75 இலட்சம் ரூபா அபராதம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டார்.

அவர் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயன்ற 3 கிலோ 500 கிராம் தங்க பிஸ்கட்கள் மற்றும் 91 கையடக்க தொலைபேசிகள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here