இந்த வருடம் 24 டெங்கு மரணங்கள் பதிவு

198

2023 ஆம் ஆண்டு மே 28ம் திகதி வரை இலங்கையில் 38,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 24 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார நிபுணர் டொக்டர் அனோஜா தீரசிங்க தெரிவித்தார்.

மற்ற ஆண்டுகளில், மழைக்காலங்களில் ஒரு மாதத்தில் 450-500 டெங்கு நோயாளர்கள் பதிவாகும். எவ்வாறாயினும், இவ்வருடம் இதே காலப்பகுதியில் மாதாந்தம் 1000-1500 நோயாளர்கள் பதிவாகியிருப்பது 2017 ஆம் ஆண்டு போன்று அதிக டெங்கு தொற்றுநோய்க்கு நாடு செல்வதற்கான ஆரம்ப அறிகுறியாகும் என வைத்தியர் அனோஜா தீரசிங்க எச்சரிக்கிறார்.

38,000 டெங்கு நோயாளர்களைக் கொண்ட நாடாக அடுத்த பருவ மழைக்காலத்தை நாடு எதிர்கொண்டுள்ளதாகவும், இது மிகவும் பாரதூரமான நிலைமை எனவும் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனோஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here