ஆப்கானிஸ்தான் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அபராதம்

1519

ஹம்பாந்தோட்டையில் கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ஆப்கானிஸ்தானுக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி விதிகளுக்கும் அமைய வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பந்துவீசத் தவறினால் ஒவ்வொரு ஓவருக்கும் போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், இது தொடர்பில் முறையான விசாரணை தேவையில்லை என ஐசிசி அறிவித்துள்ளது.

கள நடுவர்கள் நிதின் மேனன் மற்றும் பிரகீத் ரம்புக்வெல்ல, மூன்றாவது நடுவர் மைக்கேல் கோஃப் மற்றும் நான்காவது நடுவர் லிண்டன் ஹன்னிபால் ஆகியோர் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here