“மாணவர்கள் உயர்தரத்தில் சித்தியடைவது மேலதிக வகுப்புக்களால்..”

795

இந்த நாட்டில் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைவது இலவசக் கல்வியினால் அல்ல, தனியார் பணத்தினால் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

எமது பிள்ளைகள் இலவசக் கல்வியை முழுமையாக அனுபவிக்கின்றனர் என அரசாங்கம் கூறினாலும் அது பெரும் பொய் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலவசக் கல்வி எஞ்சியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் மத்திய வங்கி ஆவணங்களின்படி சுகாதாரம் மற்றும் கல்விக்காக நாற்பது வீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இன்று பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் மாணவர்கள் இல்லை எனவும், மாணவர்கள் உயர்தரத்திற்கு மேலதிக வகுப்புகளுக்காக செல்கின்றனர்.

மேலும், பாடசாலைகளுக்கு தேவையான நிதி வசதிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிகள் வழங்கப்படாததால் ஒட்டுமொத்த பாடசாலை அமைப்பும் இன்று ஆபத்தான நிலையில் உள்ளது என சுட்டிக்காட்டியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here