கொழும்பில் மின்சார பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

561

கொழும்பில் மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரைச் சுற்றி மின்சார பேருந்துகளைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கேற்ப, எதிர்காலத்தில் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான நோக்கத்தை நாங்கள் முன்வைப்போம்.

இந்த புதைபடிவ எரிபொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில், எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதால் போக்குவரத்து கட்டண உயர்வு பிரச்சினைக்கு பொது போக்குவரத்தை மின்சாரமாக மாற்றுவதே தீர்வு.

எதிர்காலத்தில் பேருந்துகள் மட்டுமின்றி முச்சக்கரவண்டி, வேன்கள் மற்றும் இதர ரயில்களையும் மின்சாரமாக மாற்ற முயற்சித்து வருகிறோம்.

இந்த ஆண்டில், தனியார் துறை மின்சார முச்சக்கர வண்டிகளை சந்தையில் அறிமுகப்படுத்தும்.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நட்டத்தில் இயங்கும் டிப்போக்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபையை வியாபாரமாக கருதி தேவையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here