இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி அதிகரித்து வருகிறது

372

2022-/23 ஆம் ஆண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி அதிகபட்ச அளவை எட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த காலகட்டத்தில் 8.09 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1.7 மில்லியன் டன் கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுகளில் உறைந்த இறால்களுக்கு அதிக கிராக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கடல் உணவுகளை இறக்குமதி செய்யும் இரண்டு முக்கிய நாடுகள் அமெரிக்கா மற்றும் சீனா.

உறைந்த இறால் ஏற்றுமதி மூலம் கிடைத்த வருமானம் 5481.63 மில்லியன் டொலர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது பெரிய ஏற்றுமதி கடல் உணவு மீன் 687.05 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா தவிர, இந்திய கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் மற்ற நாடுகள் ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகும்.இந்திய கடல் உணவு ஏற்றுமதிக்கான மிகப்பெரிய சந்தை தென்கிழக்கு ஆசியாவில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here