பசில் சாகரவுக்கு மஹிந்தவிடம் இருந்து அரசியல் பாடம்

1168

கடந்த புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் அரசாங்கத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்துரையாடலுக்கு அழைப்பதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த அழைப்பை பொஹட்டுவ தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பொஹட்டுவ தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, பொஹட்டுவ பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் சாகர காரியவசம் ஆகியோரை அழைத்து இந்த கலந்துரையாடலில் தான் ஈடுபடப்போவதில்லை என தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

“நீங்கள் இருவரும் போனால் நானும் வரவேண்டியதில்லை..” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் பசில் ராஜபக்ச மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொள்வதால் தாம் இதில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ இந்த இரு தரப்பினரையும் அழைத்து என்ன பேசுவது என்பது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியுடன் என்ன பேசுவது, அவர்களுடன் எவ்வாறு பேசுவது என்பன குறித்து மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு சில அரசியல் பாடங்களை வழங்கியுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதன்படி, பிரதமரின் அழைப்பின் பேரில் கட்சித் தலைவர்கள் கடந்த புதன்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் கூடினர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தவிர பசில் ராஜபக்ஷ, சாகர காரியவசம், டிரான் அலஸ், ஜீவன் தொண்டமான், ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகவும், ஜனாதிபதி சார்பில் வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here