மயக்க மருந்து கொடுக்கப்பட்ட 02 வயது குழந்தை உயிரிழப்பு

454

பேராதனை போதனா சிறுவர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது மயக்க மருந்துக்காக வழங்கப்பட்டதாக கூறப்படும் மருந்தினால் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அருஷ அஸ்மித என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி கால் எலும்பில் ஏற்பட்ட அறுவை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, 6 மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களில் குழந்தை உயிரிழந்ததாக குழந்தையின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். .

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவிக்கையில்;

“இந்த மரணம் தொடர்பில் பேராதனை சிறுவர் போதனா வைத்தியசாலையும் சுகாதார அமைச்சும் உரிய விசாரணை நடத்தி, மயக்க மருந்துகளின் தரம் குறைவினால் இக்குழந்தையின் மரணமும் நிகழ்ந்தது என்ற உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறான சிறுவர் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் போது மயக்க மருந்துக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களில் சிக்கல் நிலையும் தட்டுப்பாடும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னரும் பேராதனை போதனா வைத்தியசாலையில் இந்த மயக்க மருந்தினால் மரணங்கள் சம்பவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இது குறித்து தெரிவிக்கையில், இந்தியா தனது கடனுதவியின் கீழ் வழங்கப்படும் எந்தவொரு மருந்தும் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும், இவற்றின் தரம் குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here