“அமைச்சர் பதவி தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும்”

589

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை பெற்றுக் கொடுக்காவிட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வைத்தியசாலைகளில் சர்ச்சையில் இருக்கும் மயக்க மருந்து தொடர்பான நிலைமையை விளக்கிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“இந்த நேரத்தில் அறிவிப்பதற்கு மிகவும் வருந்துகிறேன்.. நீதிமன்றம் எடுத்த சில முடிவுகளால் எங்களுக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.”

“இன்னொரு காரணம் பணப் பிரச்சினை.”

“இதைச் சமாளிக்க முடியாவிட்டால், நான் அதை இந்த சபைக்கு அறிவிப்பேன்.”

“நான் முடிவெடுத்ததால்.. அமைச்சர் என்ற முறையில், இதுபோன்ற குறையை என்னால் ஈடு செய்ய முடியவில்லை என்றால், இனி எந்த பதவியையும் வகிக்கும் நம்பிக்கை இல்லை.”

“ஏனெனில் இது சமுதாயத்திற்கும் இந்த சேவைக்கும் ஒரு பெரிய குறைபாடு. காரணங்கள் எதுவாக இருந்தாலும், அந்த குறைபாடுகளுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here