உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்

249

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் கலந்துரையாடலை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக அடுத்த சில வாரங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணை தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் நீடிப்பதனால் நியமனம் செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளதாகவும் இதன் காரணமாக உரிய வேட்புமனுக்களை இரத்து செய்யுமாறும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் விசேட தீர்மானமொன்று நிறைவேற்றப்பட வேண்டும் எனவே இது தொடர்பில் சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here