பொலிஸ்மா அதிபரின் பணி நீட்டிப்பு இன்றுடன் முடிவடைகிறது

313

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடையவுள்ளது.

பொலிஸ் மா அதிபர் எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த போதிலும், அவரின் சேவையை மூன்று மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

எவ்வாறாயினும், அந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால், அதன் பின்னர் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், வெளிநாட்டில் உள்ள ஜனாதிபதி, நாடு திரும்பிய பின்னர் தீர்மானம் எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான தேஷ்பந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பதிநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here