தற்போது போதிய அரிசி கையிருப்பில் இல்லை?

518

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது போதிய அரிசி கையிருப்பில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை அதிகரிக்கும்போது அதனை கட்டுப்படுத்த சந்தைக்கு அரிசியை விநியோகிக்கும் வகையில் கையிருப்புக்களை பராமரிப்பதற்காக விவசாய அமைச்சு, ஏற்கனவே திறைசேரியிடம் நிதிக்கோரிக்கையை முன்வைத்தபோதும், அது ஐந்தாவது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே நெல் சந்தைப்படுத்தும் சபை ,போதுமான அரிசி கையிருப்பில் கொண்டிருக்கமுடியவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபைக்கு திருப்தியான கையிருப்பை பேணுவதற்கு 6 பில்லியன் ரூபாய்கள் தேவை என்றபோதும் உடனடி நிலைமையை சமாளிக்க 2 பில்லியன்களை அமைச்சு கோரியபோதும், திறைசேரி வெறும் 250 மில்லியன் ரூபாய்க்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது என அமைச்சின் செயலாளரை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே நெல் சந்தைப்படுத்தும் சபை, கையிருப்புக்களை பராமரிப்பதற்காக இரண்டு அரச வங்கிகளிடம் இருந்து பெற்ற 21 பில்லியன் ரூபாய்களை இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை என்று மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு கடன்களையும் வட்டியையும் திறைசேரியே தற்போது செலுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here