சொந்த நாட்டிற்குச் சென்ற முத்துவுக்கு பசி அதிகமாம்

1757

தாய்லாந்து சென்ற முத்து ராஜா அல்லது ‘சக்சுரின்’ யானை வளர்ப்பாளர்களுடன் லாம்பாங் மாகாணத்தில் உள்ள யானை பராமரிப்பு மையத்திற்கு தனது பயணத்தின் போது 5-10 நிமிடங்களுக்கு ஒருமுறை உணவுக்காக அழுததாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யானை பாகர்கள் ‘சக்சுரின்’ வாழை காய்கள், கரும்பு, புல் ஆகியவற்றை கொடுத்தபோது, ​​அவர் அழுகையை நிறுத்தி சாப்பிட்டதாக தாய்லாந்து ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘சக்சுரின்’, காற்றால் அடித்துச் செல்லப்பட்ட மரங்களால் சூழப்பட்ட பாதுகாப்புப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலைக்கு அவரைப் பழக்கப்படுத்துவதற்காக ‘சக்சுரின்’ கால் கயிற்றால் கட்டப்பட்டுள்ளதாகவும் தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை பல இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவற்றின் அறிக்கைகள் இன்னும் சில தினங்களில் கிடைக்கப்பெறும் எனவும் நிலையத்தின் பொறுப்பதிகாரி வைத்தியர் தெரிவித்துள்ளார்.

30 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிறகு மக்கள் ‘சக்சுரின்’ சந்திக்க முடியும் என்று மையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here