follow the truth

follow the truth

July, 4, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாசினிமாவுக்கு இடைவெளி விடும் விஜய்

சினிமாவுக்கு இடைவெளி விடும் விஜய்

Published on

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் தளபதி 68 படத்தை முடித்த பிறகு விஜய் நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 மே மாதத்திற்குள் வெங்கட் பிரபு உடனான படத்தை நிறைவு செய்துவிட்டு 2025 ஆம் ஆண்டு முழுவதும், மக்கள் இயக்கம் மற்றும் களப்பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டில் மாநாடுகள் நடத்த உள்ளதாகவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், விஜய் கவனம் செலுத்தப் போவதில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை - நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும் அபாயம் – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை தற்போதைய...

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித்

நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது....

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக,...