follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஉள்ளூராட்சி நிறுவனங்களின் ஊழியர்கள் படிப்படியாக நிரந்தரமாக்கப்படுவர்

உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊழியர்கள் படிப்படியாக நிரந்தரமாக்கப்படுவர்

Published on

மஹரகம நகரசபையில் மதிப்பீட்டு வரிகள் உட்பட ஏனைய கொடுப்பனவுகளை இணையத்தளத்தின் ஊடாக செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று (05) இடம்பெற்றுள்ளது.

இன்று முதல் ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மதிப்பீட்டு வரியைச் செலுத்த முடியும், மேலும் எதிர்காலத்தில், பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை எளிதாகவும் திறமையாகவும் வழங்குவதற்கு ஏனைய பொது சேவைகளையும் இவ்வாறு தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவது முக்கியம் என நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ளன. உள்ளுராட்சி மன்றங்களுக்கு வேட்புமனுக்கள் கோரப்பட்ட போதிலும் இதுவரை தேர்தல் நடைபெறவில்லை. எனவேதான் உள்ளுராட்சி பிரதேச செயலாளர்களுடன் இணைந்து சபையின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க கலந்துரையாடி தீர்மானங்களை எடுத்து முன்னேறுவோம் என எதிர்பார்க்கின்றோம் என பிரதமர் தெரிவித்தார்.

இன்னும் உள்ளூராட்சி அமைப்புகளில் நிரந்தரமற்ற ஊழியர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் படிப்படியாக நிரந்தரமாக்கப்படுவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...

கொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வடிகால் அமைப்புகளின்...

கடவுச்சீட்டை ஒப்படைத்த டயானா கமகே

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது கடவுச்சீட்டை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம்...