ஜப்பானிய கடல் உணவுகளுக்கு சீனா தடை விதித்துள்ளது

666

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜப்பானின் 10 மாகாணங்களில் இருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க சீனா தீர்மானித்துள்ளது.

ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட அணுக் கழிவு நீரை கடலில் விடுவதற்கான திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சீனா இந்த முடிவை எடுத்துள்ளது.

ஜப்பானின் பிற பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்ற உணவுப் பொருட்களும் கடுமையான கதிர்வீச்சு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று அந்நாட்டு சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

2011 ஆம் ஆண்டு சுனாமியால் அழிந்த புகுஷிமா அணுமின் நிலையத்தில் 1.33 மில்லியன் கனமீட்டர் கழிவுநீரை உலக தரத்தின்படி அப்புறப்படுத்த சர்வதேச அணுசக்தி முகாம் சமீபத்தில் ஜப்பானுக்கு அனுமதி வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here