கண்டி மற்றும் நாகொட வைத்தியசாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசேட விசாரணை

232

கண்டி தேசிய வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் டயாலிசிஸ் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 07 நோயாளர்கள் கடந்த காலங்களில் பூஞ்சை தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் ஆராய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, சுகாதாரத்துறையின் தற்போதைய நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

களுத்துறை, நாகொட பொது வைத்தியசாலை தொடர்பில் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அங்கு மேலும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here