எதிர்வரும் காலங்களில் உர வவுச்சர் அமுல்படுத்தப்படாது

667

விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கான வவுச்சர் வழங்கும் முறை எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தப்படாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, விவசாயிகளின் விவசாயக் கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிடுகிறார்.

இரசாயன உரங்கள் அல்லது கரிம உரங்களை கொள்வனவு செய்வதற்கு வவுச்சர்கள் மூலம் விவசாயிகளுக்கு மானியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு ஹெக்டேருக்கு 200,00 ரூபா என்ற அளவில், இளவேனிற்காலத்தில் நெல் பயிரிடும் அனைத்து விவசாயிகளுக்கும் இந்த மானிய வவுச்சர்கள் வழங்கப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வவுச்சர் விநியோகத்தில் காணப்படும் நடைமுறை சிக்கல்களை கருத்திற்கொண்டு இனிமேல் வவுச்சர் வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

மாறாக அடுத்த பருவத்தில் ரசாயன உரங்கள் அல்லது அங்கக உரங்களை அவர்களின் விருப்பத்திற்கேற்ப கொள்வனவு செய்ய விவசாயிகளின் கணக்கில் பணம் வரவு வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here