தென்கடலில் ‘ஜெலி பிஷ்’ எனும் விஷ விலங்கினம்

364

கிழக்கு கடற்கரையில் இருந்த ‘ஜெலி பிஷ்’ என்ற மீன் இனம் தெற்கு கடற்கரையிலும் பரவியுள்ளதாக தேசிய விஷ தகவல் மையம் அறிவித்துள்ளது.

இந்த உயிரினம் மனித உடலில் பட்டால் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் அதன் பிரதம நிபுணர் கலாநிதி ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை இந்த விலங்கினை கடலில் காணமுடியும் என கலாநிதி ரவி ஜயவர்தன குறிப்பிடுகின்றார்.

இந்த விலங்கு ஒரு சிறிய பலூனைப் போலவும், வயிற்றில் நீண்ட சரம் போன்ற சுரப்பிகளைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விலங்கைத் தொடுவதன் மூலம், ஒரு நபர் ஒவ்வாமையிலிருந்து அதிர்ச்சி நிலைக்குச் செல்லலாம், இதன் மூலம் நரம்பு மண்டலம், இதயம் மற்றும் சுவாச மண்டலம் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here