சஜித்திடமிருந்து மாற்றுக் குழு

359

நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களைக் கண்டறிய சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழுவுக்குப் பதிலாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்களிப்புடன் மாற்றுக் குழுவொன்று நியமிக்க தீர்மானித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவின் செயல்பாடுகளுக்கு, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும்
நல்லெண்ணத்துடன் பங்களிப்பை வழங்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் நிதி வங்குரோத்து நிலை குறித்து ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தலைமையில் குழுவொன்றை சபாநாயகர் அண்மையில் நியமித்துள்ளார்.

இருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குழுவிலிருந்து வெளியேற தீர்மானித்திருந்தன.

இவ்வாறானதொரு பின்னணியில், போலியான குழுவிற்குப் பதிலாக, ஜனரஞ்சக எதிரணியில் இருந்து உண்மையான மாற்றுக் குழுவை அமைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தக் குழுவின் செயல்பாட்டிற்கு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் நல்லெண்ணத்துடன் பங்களிக்க முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டை வங்குரோத்து செய்தவர்களை இனங்கண்டு, அவர்களின் தன்னிச்சையான தவறான தீர்மானங்களினால் நாட்டுக்கு இழந்த பொதுச் சொத்துக்கள் மற்றும் தேசிய வளங்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குழுவானது சிபாரிசு செய்யும் என எதிர்பார்ப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். பரிந்துரைக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here