சுகாதார சதி குறித்து கெஹெலிய கருத்து

536

தரக்குறைவான மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாக சிலர் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் அண்மைய நாட்களில் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக உயர் தகுதி வாய்ந்த நிபுணர்களைக் கொண்ட ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலவச சுகாதார சேவையில் நம்பிக்கை இழக்க வேண்டாம் என இலங்கை வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன பொதுமக்களிடம் விடுத்த வேண்டுகோளை தாம் பாராட்டுவதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

ஏழு பேர் கொண்ட இந்த குழுவின் சில உறுப்பினர்களை குழுவில் இணைய வேண்டாம் என அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்தக் குழுவின் உறுப்பினர்கள் மிகச் சரியான தீர்மானத்தை வழங்குவார்கள் என நம்புவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அந்தக் குழு தனது அறிக்கையை வெளியிடும் திகதியை இன்று அறிவிக்கும் என்று கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தரக்குறைவான மருந்துகள் கொண்டு வரப்பட்டதாகக் கூறி இலவச சுகாதாரப் பொதிகளை முன்னெடுத்துச் செல்லும் சிலர், இது சதியா என்பதை வெளிக்கொணரவும், எதிர்காலத்தில் இதனை நடைமுறைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here