follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுசக்விதியும் மனைவியும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்

சக்விதியும் மனைவியும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்

Published on

நிதி நிறுவனமொன்றை நடத்தி 164,185,000 ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சக்விதி ரணசிங்கவும் அவரது மனைவியும் இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

சட்டமா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

இதன்படி, குறித்த குற்றச்சாட்டை ஒப்புக் கொள்வதாக பிரதிவாதிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அதன் பின்னர், பிரதிவாதிகள் தலா 50 இலட்சம் ரூபா வீதம் இருபது மாதாந்த தவணைகளில் உரிய தொகையை செலுத்துவதற்கு நீதிமன்றில் ஒப்புக்கொண்டனர்.

இதன்படி, முதல் தவணை இன்று செலுத்தப்படும் என, பிரதிவாதிகள் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஜனவரி 1, 2006 மற்றும் செப்டம்பர் 3, 2008 க்கு இடையில் நுகேகொட பிரதேசத்தில் சக்விதி கட்டுமான நிறுவனமாக நடத்திச் செல்லப்பட்ட நிறுவனத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 164,185,000 ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர், பிரதிவாதிகளுக்கு எதிராக திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இரங்கல் : இப்ராஹிம் ரைசி 63 வயதில் இறந்தார்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மலை மற்றும் வனப்பகுதியில்...

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க கோரிக்கை

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வெசாக் போயா தினமன்று ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு...

ஈரானின் இடைக்கால ஜனாதிபதி யார்?

ஈரானின் ஜனாதிபதியாகப் பணியாற்றிய இப்ராஹிம் ரைசி நேற்று (19) அந்நாட்டின் மலைப் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்...