களனி பாலத்தில் ஆணி கழற்றப்பட்ட கதை பொய்யானது [VIDEO]

295

களனி பாலத்தில் ஆணிகள் கழற்றப்படவில்லை என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

“.. களனி பாலத்தின் ஆணிகள் கழற்றப்பட்தாக கூறப்படும் கதை முற்றிலும் பொய்யானது. பாலத்தின் மேல்தளத்தில்
குழாய் திருடப்பட்டுள்ளது. மழைநீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பிவிசி குழாய்கள் திருடப்பட்டுள்ளன.

புதிய களனி பாலத்தின் தகவல் தொடர்பு கட்டிடத்தில் உள்ள தகவல் அமைப்பின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் குளிரூட்டிகளின் வெளிப்புற பாகங்கள் திருடப்பட்டுள்ளன. பாலத்தில் கண்கவர் ஒளி வடிவங்களை உருவாக்கும் விளக்குகள் திருடப்பட்டுள்ளன.

பீவிசி குழாய்கள் திருடப்பட்டதால் 40 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குளிரூட்டி உதிரிபாகங்கள் திருடப்பட்டதால் 0.5 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. கண்கவர் ஒளி வடிவங்களை உருவாக்கும் விளக்குகள் திருடப்பட்டதால், 10 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த நஷ்டம் அறுபது லட்சம்.

புதிய களனி பாலத்தில் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படவில்லை. ஆணிகள் அகற்றப்படவில்லை. அவற்றை இலகுவாக கழற்ற முடியாது. ஆணிகளை அகற்ற பொறியியல் நிறுவனம் சிறப்பு உபகரணங்களை கொண்டு வர வேண்டும். இல்லையெனில் பாலம் ஆபத்தில் இருக்கும். இது வெறும் ஆணி அடிக்கும் ஒரு அறிக்கை…”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here