சிறுவர்களுக்கு போடப்படும் தடுப்பூசிகளுக்கு பயப்பட வேண்டாம்

280

தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் தொடர்பில் சந்தேகம் ஏதும் தேவையில்லை எனவும், அதற்கமைய அந்த தடுப்பூசிகளை சிறுவர்களுக்கு கட்டாயமாக வழங்க வேண்டும் எனவும் தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே வலியுறுத்தினார்.

மேலும் தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்துக்காக கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரத்தை உறுதிப்படுத்தியவை மட்டுமே என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கிணங்க, நோயைத் தடுப்பதற்காக உரிய தடுப்பூசிகளை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்க பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமெனவும், இல்லையேல் அது பல நோய்கள் அதிகரிக்கக் காரணமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஹெட்டிபொல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக கூறப்படும் குளியாபிட்டிய மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here