செப்டம்பர் மாதத்திற்குள் மீண்டும் பொருளாதார நெருக்கடி?

2122

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் நாடு மீண்டும் செப்டெம்பர் மாதம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என வடமேற்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெட்சிலா தெரிவித்துள்ளார்.

நிதி நிதியத்தின் 39 வீத பொருளாதார மீட்சி ஒப்பந்தங்கள் மே மாதத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய போதிலும், அரசாங்கம் 10 வீதத்தையே நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் அமிந்த மெத்சில மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது, ​​இந்த வருடத்தின் முதல் காலாண்டில், இலங்கை முதலீட்டுச் சபை நிரந்தரமாக 211 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளைப் பெற்றுள்ளதாக, முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here