follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1'பெண்களே மஹிந்தவை அதிகம் நேசிக்கிறார்கள் - அவர் நம் இதயத்தில் பதிந்துவிட்டார்'

‘பெண்களே மஹிந்தவை அதிகம் நேசிக்கிறார்கள் – அவர் நம் இதயத்தில் பதிந்துவிட்டார்’

Published on

இந்நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரே கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆனமடுவையில் நேற்று (23) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிர்வாக சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போன்று மக்கள் நேசிக்கும் ஒரு தலைவரை தனது அரசியல் வாழ்வில் கண்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு முதல் அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அதற்குக் காரணம் எங்கள் கட்சி மற்றும் தலைவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே என்றும் அவர் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவை பெண்கள் அதிகம் நேசிப்பதாகவும், அவர் எங்களின் இதயங்களில் இருப்பதாகவும், அவர் இல்லையென்றால் இந்த மேடையில் யாரும் அமர முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...

பேருந்து கட்டண குறைப்பு இன்று முதல் அமுலில்

வருடாந்திர கட்டண திருத்தத்தின் கீழ், 0.55% சதவீதம் குறைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டணங்கள் இன்று (04) முதல் நாடு...

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை - நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும் அபாயம் – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை தற்போதைய...