follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1இனிமேல் போர்ட் சிட்டி பீச் க்கு வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும்

இனிமேல் போர்ட் சிட்டி பீச் க்கு வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும்

Published on

கொழும்பு போர்ட் சிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட கடற்கரை பார்வையாளர்களுக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு சென்று குதூகலமாக அங்குள்ள வளங்களை அனுபவித்தனர்.

இயற்கையான கடலையும் அதன் அலையையும் ஓரளவு கட்டுப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இரம்யமான கடற்கரை மற்றும் அதில் உள்ள விளையாட்டுக்கள், மற்றும் உணவகங்களை பார்வையிடவே மக்கள் வரிசையாக செல்கின்றனர்.

ஆனால் இந்த கடற்கரை திறந்துவைக்கப்பட்ட முதல் நாளில் மோட்டார் சைக்கிள், மற்றும் த்ரீவீல் என்பவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. காலி முகத்திடல் ஆரம்பத்தில் இருந்து குறித்த கடற்கரைக்கு செல்ல 5 கிலோ மீட்டர்கள் செல்ல வேண்டியுள்ளது. அதனாலயே இந்த அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால த்ரீவீல் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அந்த இடத்தை நாசமாக்கி விட்டு சென்றுள்ளதால் இனிமேல் த்ரீவீல், பைக், அல்லது நடந்து செல்லவோ அனுமதி வழங்கப்படமாட்டாது என அங்குள்ள பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

எனவே இனிமேல் போர்ட் சிட்டி பீச் க்கு போவதாக இருந்தால் வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும்.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...