பிரதமர் தனது பாடசாலை நாட்களில் விளையாடிய குத்துச்சண்டையை நினைவு கூர்ந்தார்

526

சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் (IBA) தலைவர் உமர் கிரெம்லெவ் மற்றும் குழுவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை அண்மையில் அலறி மாளிகையில் சந்தித்தனர்.

உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் முடிவில் சிநேகபூர்வ உரையாடலின் போது, ​​பிரதமர் தனது பாடசாலை நாட்களில் தனது விளையாட்டு வாழ்க்கையை நினைவு கூர்ந்தார், “நான் இளமையாக இருந்தபோது, ​​ரோயலில் குத்துச்சண்டை விளையாடினேன்” என்று கூறினார்.

அந்தக் கதையைக் கேட்ட உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் ராய் ஜோன்ஸ் ஜே.ஆர், (Roy Jones JR ) “இப்போது கூட நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களில் குத்துச்சண்டைப் போட்டி நடத்துகிறீர்கள்” என்றார்.

“இல்லை.. இல்லை.. அங்கே ஷேடோ பாக்ஸிங் செய்கிறோம்” என்றார் புன்னகையுடன்.

இந்த உரையாடலில் கலந்து கொண்ட தலைவர் உமர் கிரெம்லேவ், “குறைந்த காலம் குத்துச்சண்டை விளையாடியதன் மூலம் நீங்கள் பெற்ற ஒழுக்கம் இந்த வகையான நிலையை அடைய உதவியது என்று நான் நினைக்கிறேன்..”

முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் ராய் ஜோன்ஸ் ஜே.ஆர் மற்றும் பர்னா சோல்ட் ஆகியோரும் இந்த நிகழ்வில் இணைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here